யாழ்ப்பாணம் - தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் தனது  உத்தியோகபூர்வ துப்பாக்கியால் தனக்குத்தானே சுட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில்  சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தற்கொலை செய்து கொண்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.