நாட்டினுள் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜங்க அமைச்சர் விஜயகலா மீது பிரதமரின் அறிவுறுத்தலுக்கமைய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்றில் சபாநாயர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வடகிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலை புலிகளின் கைகள் ஓங்கினால்தான் தமிழ் மக்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வழ முடியும் என்று தெரிவித்திருந்தார். 

இந் நிலையில் இன்று பாராளுமன்றம் கூடிய போது விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தினால் பாராளுமன்றில் பெரும் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டதோடு அவரை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சபாநாயகரிடம் விடுக்கப்பட்டது. 

இதன் காரணமாக தொடர்ந்து பாராளுமன்ற அமர்வுகளை நடத்திச் செல்வதற்கு தடை ஏற்பட்டதால் பாராளுமன்ற அமர்வை நாளை காலை வரையில் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகளுக்கு,

விஜயகலாவின் கருத்தால் பாராளுமன்றத்தில் குழப்பம்

இராஜங்க அமைச்சர் விவகாரம் தொடர்பில் பிரதமரின் அதிரடி உத்தரவு!!!

இராஜாங்க அமைச்சருக்கு எதிராக முறைப்பாடு

புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகிழக்கு மக்களுக்கு நிம்மதி - விஜயகலா