இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்தினால்  பாராளுமன்ற அமர்வுகள் யாவும் நாளை வரை  ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்தார்.

தமிழீழ விடுதலை புலிகள் குறித்து  இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்டிருந்தார்.

குறித்த கருத்தால் பாராளுமன்றில் ஏற்பட்ட  சர்ச்சையால் பாராளுமன்றத்தில் குழப்பநிலையேற்பட்டது.

இந்நிலையில் பாராளுமன்ற அமர்வுகளை நாளை பிற்பகல் ஒரு மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.