துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அதற்கான அனுமதிப்பத்திரத்தினை மீண்டும் உரிதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் துப்பாக்கிக்கான அனுமதியை கொண்டிருப்பவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் அனுமதிப்பத்திரத்தை சமர்ப்பித்து உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் அண்மைக்காலமாக இடம்பெறுகின்ற வன்முறைச் சம்பவங்களுக்கு துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுகின்றமை அதிகரித்துள்ளதுடன் அனுமதி பத்திரமின்றி பலர் துப்பாக்கி வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.