தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும்  உருவாக்கப்பட வேண்டும் என சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணை செய்யுமாறு பிரதமர் சபாநாயகருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டின் ஆட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இராஜாங்க அமைச்சர் ஒருவர் நாட்டில் தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்று மீள உருவாக்கப்பட வேண்டும் என கருத்து வெளியிட முடியாது எனவும் இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனக்கு அறிவுறுத்தியதாக சபாநாயகர் கரு ஜயசூரிய ஊடகங்களுக்கு  தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகளுக்கு,

இராஜாங்க அமைச்சருக்கு எதிராக முறைப்பாடு

புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகிழக்கு மக்களுக்கு நிம்மதி - விஜயகலா