அமைச்சரவை அந்தஸ்துள்ள பிரதேச அபிவிருத்தி அமைச்சராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். 

அண்மையில் மரணமடைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர், எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்த்தனவின் பாராளுமன்ற ஆசனத்திற்கு பொன்சேகா தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.