இந்தியாவின் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தலையால் நடந்தான்குளம் கிராமத்தில் எலியைக் கொல்ல வைத்த விஷ கேக்கை சாப்பிட்ட சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் எலித்தொல்லை அதிகாமாக இருந்ததனால் எலியைக் கொல்ல திட்டமிட்ட சிறுவனின் தந்தை எலி மருந்து வி‌ஷம் தடவிய கேக்கைவாங்கி வீட்டில் எலி நடமாடும் பகுதிகளில் வைத்துள்ளார். 

எலிமருந்து வி‌ஷம் தடவிய கேக்கைப் பார்த்த 8 வயது சிறுவன் அதை சாப்பிடும் பொருள் என நினைத்து கேக்கை எடுத்து சாப்பிட்டுள்ளான்.

சிறிது நேரத்தில் சிறுவன் மயக்கமடைய அதிர்ந்து போன சிறுவனின் தந்தை அவனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

ஆனால் சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.