இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்றை முன்வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சிங்கள ராவய அமைப்பினர் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் நேற்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியின் மக்கள் சேவை நிகழ்ச்சித் திட்ட நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்த விஜயகலா மகேஸ்வரன், தமிழீழ விடுதலை புலிகளின் கைகள் வடகிழக்கு மாகாணங்களில் ஓங்கவேண்டும். தமிழீழ விடுதலை புலிகளை வடகிழக்கு மாகாணங்களில் உருவாக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

ஆகவே விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும் பயங்கரவாதத்தை தூண்டும் வகையிலும் அவரது கருத்துக்கள் அமைந்துள்ளது என கூறியே அவருக்கு எதிராக சிங்கள ராவய அமைப்பினர் பொலிஸ் தலைமையகத்தில் இன்றைய தினம் முறைப்பாடொன்றினை முன்வைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.