அமெரிக்காவின் இதாஹோ மாநிலத்தில் அகதிகள் குடியிருப்பில் நேற்று  இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் 3 வயது குழந்தை உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த 3 வயது குழந்தையின் பிறந்தநாள் வைபவத்தின் போதே இந்த கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 

காயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் 30 வயதான டிம்மி கின்னர் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேகநபர் லொஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்தவர் என்பதுடன் இவர் ஒரு அகதி அல்லவெனவும் பொலிஸார் கூறினர். ஆனால் அவர் அனுமதியின்றி பொய்ஸிலுள்ள அகதிகள் குடியிருப்பில் தங்கியிருந்த சந்தர்ப்பத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் குறித்த குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்டமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட கின்னர் பல குற்றச்செயல்களுடன் தொடர்புப்பட்டவர் எனவும் இவர் மீது 15 வழக்குகள் உள்ளதாகவும் பொய்ஸ் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.