44ஆவது தேசிய விளையாட்டு விழா மல்யுத்தப் போட்டிகளில் மட்டக்களப்பு வீரர் நிமலாகரன் நிஷோத் கிழக்கு மாகாணம் சார்பாக வெண்கலப்பதக்கம் வென்று சாதனை நிலைநாட்டியுள்ளார்.
அனுராதபுரம் உள்ளக விளையாட்டு அரங்கில் ஜூன் மாத இறுதியில் நடைபெற்ற இப் போட்டிகளில் இலங்கையின் ஒன்பது மாகாணங்களின் அணிகள் பங்குபற்றி இருந்தன.
கழக முகாமையாளர் திரு. தி. சிறிஸ்கந்தராஜா (மாநகர சபை உறுப்பினர், மட்டக்களப்பு) சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக் கழகத்தின் மல்யுத்த பயிற்றுவிப்பாளர் திரு. வே. திருச்செல்வம் (உடற்கல்வி ஆசிரியர் – மட்டக்களப்பு இந்துக்கல்லூரி) அவர்களின் பயிற்சியின் கீழ் களமிறங்கிய கிழக்கு மாகாண அணி சார்பாக 57-61 கிலோ பிரிவில் நிமலாகரன் நிஷோத் வெண்கலப்பதக்கத்தினை வென்றார்.
இவர் ஏற்கனவே 2015, 2016 ஆம் ஆண்டுகளில் இப் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தினைப் பெற்றவர். அத்துடன் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவரான இவர் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மல்யுத்தப் போட்டிகளிலும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்கள்.
மேலும் கடந்த வருடங்களில் தேசிய விளையாட்டு விழாவில் பங்குகொண்ட சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக்கழக வீரர்கள் தொடர்ச்சியாக கிழக்கு மாகாணம் சார்பாக பதக்கங்களை வெற்றியீட்டி எமது மாவட்டத்துக்கும் எமது மாகாணத்துக்கும் பெருமை தேடித்தந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM