ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட கார் குண்டு தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் லாகர் மாகாணத்தில் நேற்று கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், நாட்டோ படைகள் சென்ற வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலினாலே குறித்த ஐவரும் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தானில் நன்கர்ஹர் மாகாணத்தின் தலைநகரான ஜலாலாபாத் என்னும் இடத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் சீக்கியர்கள் உள்பட 19 பேர் பரிதாபமாக பலியானமையும் குற்ப்பிடத்தக்கது.