கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்ட இரு பிரேசில் நாட்டவர்களிடமிருந்து மீட்கப்பட்ட கொக்கெய்னின் மாத்திரைகளின் எண்ணிக்கை 163 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட மாத்திரைகளின் நிறை 960 கிராம் என தெரிவிக்கப்படுகின்றது.

இவற்றின் பெறுமதி சுமார்  4 கோடியே 85 இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதி வாய்ந்தவையென்றும் பொலிஸ் போதைப்பொருள் பிரிவினரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

30 மற்றும் 24 வயதுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இவர்கள் இருவரில் ஒருவரிடமிருந்து 91 கொக்கெய்ன் மாத்திரைகளும் மற்றையவரிடமிருந்து 72 கொக்கெய்ன் மாத்திரைகளும் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளன.