அனுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலாவ பகுதியில் அரச வங்கியொன்றில் புகுந்த கொள்ளையர்கள் வங்கியிலுள்ள பணம் மற்றும் நகைகள் என்பவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு வங்கியினுள் நுழைந்த கொள்ளையர்கள் வங்கியிலிருந்து சுமார் 78 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளையும் 17 மில்லியன் ரூபா பணத்தினையும் கொள்ளையிட்டுச் சென்றுள்தாக தெரியவருகிறது.

இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.