மாத்தறையில் அண்மையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் வாகனத்தின் உரிமையாளரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த வாகனத்தின் உரிமையாளரை இன்று அதிகாலை மொரகஹகென்ன பகுதியில் வைத்து பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டநபரின் மனைவியன் பெயரில் குறித்த வாகனம் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட நபர் கொள்ளையர்களில் ஒருவரான கொஸ்கொட தாரக்கவின் நெருங்கிய நண்பரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.