காவத்தை பகுதியில் இடம்பெற்ற ஊர்வலமொன்றின் போது யானை ஒன்றுக்கு மதம் பிடித்து தாக்கியதனால் ஊர்வலத்தில் கலந்துகொண்ட 31 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக காவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இவ்வாறு காயமடைந்தவர்களில் 19 பெண்களும் 12 ஆண்களும் அடங்குவதாகவும் சம்பவத்தில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் ஒருவரும் காயமடைந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டிருந்தது.

இவ்வாறு காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.