சமநிலை பெனல்டி முறிப்பில் ஸ்பெய்னை அதிரவைத்த வரவேற்பு நாடான ரஷ்யா

Published By: Vishnu

02 Jul, 2018 | 08:48 AM
image

மேலதிக நேர ஆட்ட நிறைவின்போதும் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்த முன்னோடி கால் இறுதிப் போட்டியில் சமநிலை முறிப்பு பெனல்டிகளில் இரண்டை கோல்காப்பாளர் இகோர் அக்கின்வீவ் தடுத்து நிறுத்தியதன் பலனாக முன்னாள் சம்பியன் ஸ்பெய்னை 4 க்கு 3 என்ற பெனல்டி அடிப்படையில் வெற்றிகொண்ட வரவேற்பு நாடான ரஷ்யா, உலகக் கிண்ண கால் இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

இத் தோல்வியினால் உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து ஸ்பெய்ன் வெள்ளியேற்றப்பட்டது. ஜெர்மனி, ஆர்ஜன்டீனாவைத் தொடர்ந்து வெளியேற்றப்பட்ட மூன்றாவது முன்னாள் உலக சம்பியன் ஸ்பெய்ன் ஆகும்.

மொஸ்கோ, லுசிக்கி விளையாட்டரங்கில் ரஷ்யாவுக்கும் ஸ்பெய்னுக்கும் இடையில் ஞாயிறு இரவு நடைபெற்ற போட்டி 90 நிமிட நிறைவின்போதும் அதனைத் தொடர்ந்து வழங்கப்பட்ட 30 நிமிட மேலதிக நேர நிறைவின்போதும் 1 க்கு 1 என்ற கோல் அடிப்படையில் சம நிலையில் இருந்தது. இதனை அடுத்து வழங்ப்பட்ட பெனல்டி முறையில் ரஷ்யாவுக்கே அதிர்ஷ்டம் கிடைத்தது.

இப் போட்டியில் கோல் போடுவதற்கு பெரும் சிரமப்பட்ட ஸ்பெய்னுக்கு 12ஆவது நிமிடத்தில் இனாம் கோல் ஒன்று ரஷ்ய வீரரால் போட்டுக்கொடுக்கப்பட்டது. ஸ்பெய்ன் அணித் தலைவர் சேர்ஜியோ ரமோசை தடுப்பதற்கான கடும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ரஷ்ய வீரர் சேர்ஜி இஞ்ஞாஷெவிச், உள்நோக்கி வந்த பந்துக்கு புறமுதுகு காட்டியபோது பந்து அவரது பாதணியில் பட்டு அவரது சொந்த கோலினுள்ளேயே சென்றது.

போட்டியின் 39ஆவது நிமிடத்தில் ரஷ்யா கோல்போடுவதை தடுக்கும் வகையில் தனது பெனல்டி எல்லையில் உயரே தாவிய ஜெரார்ட் பிக்கே பந்தை இடது கையால் தட்டியதால் மத்தியஸ்தர் எவ்வித கேள்விக்கும் இடமின்றி ரஷ்யாவுக்கு பெனல்டி ஒன்றை வழங்கினார். அத்துடன் பிக்கேவுக்கு மஞ்சள் அட்டையையும் காட்டினார்.

இந்தப் பெனல்டியை 41ஆவது நிமிடத்தில் ஆர்ட்டெம் டிஸியுபா இலக்கு தவறாமல் உதைத்து ரஷ்யா சார்பாக கோல் நிலையை சமப்படுத்தினார்.

அதன் பின்னர் வெற்றி கோலைப் போடுவதற்காக இரண்டு அணிகளும் முயற்சித்தன. ஸ்பெய்ன் அணிக்கு கிடைத்த எல்லா வாய்ப்புகளுமே பலனற்றுப் போயின. ரஷ்ய கோல்காப்பாளர் அக்கின்பீவ் பல சந்தர்ப்பங்களில் எதிரணியின் கோல் போடும் முயற்சிகளை தனி ஒருவராக தடுத்து போட்டி நாயகனானார். 

ஆட்டம் முழு நேரத்தைத் தொட்டபோது இரண்டு அணிகளும் தலா ஒரு கோலுடன் சம நிலையில் இருந்தன.

இதனைத் தொடர்ந்து வழங்கப்பட்ட 30 நிமிட மேலதிக நேரத்தின்போது கோல் போடுவதற்கான பல வாய்ப்புகளை ஸ்பெய்ன் தோற்றுவித்த போதிலும் ரஷ்ய அணித் தலைவரும் கோல்காப்பாளருமான இகோர் அகின்பீவும் வீரர்களும் அவற்றை ஒவ்வொரு முறையும் தடுத்த வண்ணம் இருந்தனர்.

மேலதிக நேர நிறைவின்போதும் ஆட்டம் வெற்றிதோல்வியின்றியே  நிறைவடைந்திருந்தது.

இதனை அடுத்து வெற்றி அணியைத் திர்மானிப்பதற்காக பெனல்டி முறையை மத்தியஸ்தர் அமுல்படுத்தினார். இதில் இரண்டு பெனல்டிகளை ரஷ்ய அணித் தலைவர் இகோர் அக்கின்பீவ் தடுத்து நிறுத்தி ரஷ்யாவை கால் இறுதிக்கு இட்டுச் சென்றானர்.

கோக் எனத் அறியப்படும் ஜொர்ஜ் ரெசரெக்ஷ்னின் பெனல்டியையும் இகோர் அஸ்பாஸின் பெனல்டியையும் இகோர் அக்கின்பீ்வ் தடுத்து நிறுத்தி ரஷ்யாவுக்கு கால் இறுதி வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்தார்.

ஸ்பெய்ன் சார்பாக இனியெஸ்டா, பிக்கே, சேர்ஜியோ ரமோஸ் ஆகியோரும் ரஷ்யா சார்பாக ஸ்மோலொவ், சேர்ஜி இஞ்ஞாஷேவிச், கோலோவின், செரிஷேவ் ஆகியோரும் பெனல்டிகளை இலக்கு தவறாமல் கோலினுள் புகுத்தினர்.

இப் போட்டியின்போது பல கோல் போடும் வாய்ப்புகளையும் சமநிலை முறிப்ப பெனல்டிகளில் இரண்டையும் தடுத்து நிறுத்திய இகோர் அக்கின்பீவ் ஆட்டநாயகனானார். (என்.வீ.ஏ.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35