இந்திய தலைநகர் புதுடில்லியில் வீடொன்றிற்குள் இருந்து 11 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்

சிறிய வணிகவளாகமொன்றை நடத்திவந்த குடும்பத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்

4பெண்கள் உட்பட 11 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

11 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்

இவர்களின் கண்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

இவர்கள் கொலை செய்யப்பட்டனரா என்ற கோணத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் வீட்டிலிருந்த நகைகள் பொருட்கள் எவையும் காணாமல்போகவில்லை அதேபோன்று இறந்தவர்களின் உடல்களில் நகைகள் அப்படியேபிருந்தன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட வீடு வர்த்தகத்தில் ஈடுபட்;ட நபருடையது அவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வர்த்தகருடன் காலையில் நடைபயிற்சியில் ஈடுபடும் அயலவர் காலை அந்த வீட்டிற்கு சென்றவேளை வீட்டின் கதவு திறந்துகிடப்பதை பார்த்ததாகவும் பின்னர் வீட்டினுள் சடலங்களை கண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இது கொலை இத்தனை பேர் ஒரே நேரத்தில் தற்கொலை செய்ய மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்