ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் எரிபொருள் பெற்றுக் கொண்டமைக்காக கனியவள கூட்டுத் ஸ்தாபனத்துக்கு 12 மில்லியன் ரூபா பணம் செலுத்த வேண்டும் என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி இலங்கை மின்சார சபையினால் பெற்றுக் கொள்ளப்பட்ட எரிபொருளுக்காக கனியவள கூட்டுத் தபானத்துக்கு 55 மில்லியன் ரூபா பணம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவித்த அவர், இதன் காரணமாக  கனியவள கூட்டுத் ஸ்தாபனத்தில் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்வது கடினமான செயற்பாடாகும் என்றார்.

மேலும் எதிர்வரும் புதன்கிழமைக்குள் பணம் கிடைக்காவிடின் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கான எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.