(எம்.எம்.மின்ஹாஜ்)

மகாண சபைத் தேர்தல் உட்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பில் ஆராயும் நோக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழு அலரிமாளிகையில் நாளை கூடவுள்ளது.

இந்தக் கூட்டத்தின்போது சமகால அரசியல் நிலவரங்கள், இவ்வார பாராளுமன்ற கூட்டத் தொடரில் விவாதிக்கப்படவுள்ள மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பாவும் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது.

இந்த கூட்டத்திற்கு ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களும் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.