தேனீர் ஒன்றின் விலையை 5 ரூபாவினால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

சமயல் எரிவாயுவின் விலை 138 ரூபாவினால் குறைக்கப்பட்டதை தொடர்ந்தே  இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த தீர்மானம் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் அமுல்படுத்தப்படும்.

அத்துடன் மரக்கறிகளின் விலைகளும் குறைந்தால் உணவு பொதிகளின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கான நடவடிக்கையை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.