(எம்.சி.நஜிமுதீன்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தத்தமது கட்சி நலன்களை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, மக்கள் நலன்சார்ந்த விடயங்களை முன்னிறுத்தி செயற்பட வேண்டும் என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கடந்த ஆட்சியில் இடம்பெற்ற பிழைகளை இந்த ஆட்சியிலும் இடம்பெறுவதற்கு இடமளிக்கக்கூடாது. இருவரும் தத்தமது கட்சி நலன்களை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு மக்கள் நலன்சார்ந்த செயற்பாடுகளை முன்னிறுத்தி செயற்பட வேண்டும். மேலும் நல்லாட்சி அரசாங்கத்திற்கு இன்னும் பதினெட்டு மாதங்களே எஞ்சியுள்ளன. 

எனவே இக் காலப் பகுதியில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் அடுத்த தேர்தலில் நல்ல பாடம் புகட்டுவார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.