எடின்சன் கெவானி இரண்டு அற்புதமான கோல்களைப் போட்டதன் மூலம் உலகக் கிண்ண முன்னோடி கால் இறுதியில் (16 அணிகளுக்கான இரண்டாம் சுற்று நொக் அவுட்) போர்த்துக்கலை 2 க்கு 1 என்ற கோல்கள் அடிப்படையில் உருகுவே வெற்றிகொண்டு கால் இறுதியில் விளையாட தகுதிபெற்றது.
சொச்சி பிஷ்ட் அரங்கில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியின் ஆரம்பித்தில் தலையால் தட்டியும் இடைவேளையின் பின்னர் வலது காலால் உதைத்தும் கெவானி போட்ட கோல்கள் இரண்டும் மிகவும் அற்புதமானவையாக அமைந்தன.
உலகின் சமகால புகழ்பூத்த கால்பந்தாட்ட வீரர்களான லயனல் மெசி, க்றிஸ்டியானோ ரொனால்டோ ஆகிய இருவரின் தலைமைகளிலான ஆர்ஜன்டீனாவும் போர்த்துக்கலும் ஒரே நாளில் உலகக் கிணணப் போட்டிகளிலிருந்து வெளியேற்றப்பட்டன.
உருகுவேக்கும் போர்த்துக்கலுக்கும் இடையிலான போட்டியில் வேகம், விவேகம், விறுவிறுப்பு, மிகச் சிறந்த பந்துபரிமாற்றங்கள் என சகலவிதமான ஆற்றல்களையும் பார்க்கக்கூடியதாக இருந்தது. ஆனால் அவை அனைத்திலும் உருகுவே மேலோங்கிக் காணப்பட்டதுடன் வெற்றிக்கான அதிர்ஷ்டமும் அவ்வணிக்கே இருந்தது.
அதனையும் விட போர்த்துக்கலின் நட்சத்திர வீரர் க்றிஸ்டியானோ ரொனால்டோவைக் கட்டுப்படுத்துவதற்கென உருகுவே அமைத்திருந்த தடுத்தாடல் வியூகம் மிகச் சிற்பபாக அமைந்திருந்தது. இதன் காரணமாக ரொனால்டோவாவால் பல சந்தர்ப்பங்களில் கோல் போடும் வாய்ப்புகளை ஏற்படுத்தவோ நிறைவேற்றவோ முடியாமல் போனது. அவரது ப்றீ கிக்குகளும் எதிர்பார்த்த பலனைத் தராமல் போயின.
போட்டி ஆரம்பித்து 7ஆவது நிமிடத்தில் களத்தின் இடதுகோடியிலிருந்து லூயிஸ் சுவாரெஸ் பரிமாறிய பந்தை நோக்கி வேகமாக நகர்ந்த எடின்சன் கெவானி, மிக நேர்த்தியாக தலையால் தட்டி உருகுவேயின் முதலாவது கோலைப் போட்டார்.
இந்த கோலானது உருகுவேக்கு ஆறுதலைக் கொடுத்த அதேவேளை போர்த்தக்கல் நெருக்கடிக்குள்ளானது.
இடைவேளையின் பின்னர் 55ஆவது நிமிடத்தில் ரபாயல் குரேரோவின் கோர்ணர் கிக் பந்தை நோக்கி மூன்று அடி உயரம்வரை தாவிய பெப்பே தலையால் முட்டி கோல் நிலையை சமப்படுத்தி போர்த்துக்கலுக்கு உற்சாகமூட்டினார்.
ஆனால் போர்த்துக்கலின் உற்சாகமும் மகிழ்ச்சியும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை.
போட்டியின் 62ஆவது நிமிடத்தில் வலது கோடியிலிருந்து லூயிஸ் சுவாரெஸ் தாழ்வாக பரிமாறிய பந்தை கேவானி வலது காலால் உதைத்து தனது இரண்டாவது கோலைப் போட்டார்.
இதனைத் தொடர்ந்து கோல் நிலையை சமப்படுத்துவதற்கு ரொனால்டோவும் ஏனைய போர்த்துக்கல் வீரர்களும் எவ்வளவோ முயன்றும் அந்த முயற்சிகள் யாவும் தடுக்கப்பட்டன. குறிப்பாக உருகுவே கோல்காப்பாளர் பெர்னாண்டோ முஸ்லேரா பந்தைத் தடுத்து நிறுத்திய விதம் பலத்த பாராட்டைப் பெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM