மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊறணி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் ஊறணி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றின் மீது வேகமாக வந்த முச்சக்கர வண்டியே மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தின் போது முச்சக்கர வண்டியின் சாரதி உட்பட நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் இவர்களுள் ஒருவரது நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.