அம்பாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமனலகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்துவர் 41 வயதுடையவர் எனவும் 43 வயதுடைய அவரது சகோதரரே மேற்படி தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டவர் எனவும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரை கைதுசெய்த அம்பாந்தோட்டை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.