இராணுவத்தின் ஐந்து பிரிகேடியர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மேஜர் ஜெனரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவ செயலாளர் காரியாலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த ஐந்து பேரும் மனிதாபிமான நடவடிக்கையின்போது பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கியவர்கள் எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.