மேற்கிந்திய அணிகளிற்கு எதிரான டெஸ்டில் பந்தின் உருவத்தை மாற்ற முயன்றமைக்காக அணித்தலைவர் தினேஸ் சந்திமலிற்கு எதிராக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தனியான தடைகளை விதிக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டாவது டெஸ்டில் ஆடுகளத்திற்குள் நுழைவது இல்லை என்ற இலங்கை அணி மற்றும் முகாமையாளர்களின் முடிவு தவறானது என்பதை ஏற்றுக்கொண்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா அதேவேளை இலங்கை கிரிக்கெட் தடைகள் எதனையும் விதிக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அணிவீரர்கள் மைதானத்திற்குள் நுழையாதது குறித்து  நான் குழப்பமடைந்தேன் அது பிழையான விடயம் அது இடம்பெற்றிருக்ககூடாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதேவேளை அணியினர் அணித்தலைவரிற்கு ஆதரவளிக்க முயல்கின்றனர் என்பதும் எனக்கு தெரியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அணியின் அந்த நடவடிக்கை குறித்து நாங்கள் வேதனையடைகின்றோம்  நாங்கள் உயர்ந்த பட்ச ஒழுக்கத்தை பேணவேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சந்திமல் தவறிழைக்கவில்லை எனநாங்கள் கருதுகின்றோம் ஆனால் ஐசிசி தடைகள் அபராதங்களை விதித்துள்ளது நாங்கள் அதற்கு கட்டுப்படுகின்றோம் எனவும் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.