பதினாறு பேர் அணிக்கு எதிராக  ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை- ரோஹன லக்ஷமன் பியதாஸ

Published By: Daya

30 Jun, 2018 | 04:36 PM
image

(எம்.சி.நஜிமுதீன்)

தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதினாறு பேர் அணிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என அக்கட்சியின் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷமன் பியதாஸ தெரிவித்துள்ளார். 

கண்டியில் நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறியுள்ள பதினாறு பேர் அணியினர் இன்னும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலேயே உள்ளனர். அவர்கள் கட்சியின் மத்திய செயற்குழுவில் அங்கம் வகிக்கன்றனர். பாராளுமன்ற குழுக்கூட்டத்திலும் கலந்துகொள்கின்றனர். கட்சியின் மறுசீரமைப்பு பணிகளிலும் பங்கெடுக்கின்றனர். எனவே அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எமுக்கப்போவதில்லை. 

மேலும் அவ்வுறுப்பினர்கள் எவரும் தாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகிக்கொள்வதாக எழுத்துமூலம் அறியத்தரவுமில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வந்துள்ளதை வரலாறு நெடுகிலும் காணமுடிகிறது.

ஆயினும் கட்சியை எவராலும் பலமிழக்கச் செய்ய முடியாது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சாதாரண மக்கள் முதல் சகலரினதும் ஆதரவைப் பெற்ற கட்சியாகும். எனவே மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை  கட்டியெழுப்பி பலமான நிலைக்கு கொண்டுவருவோம்.

அத்துடன் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானத்திற்கமைவாக அபேட்சகரை களமிறக்குவோம். அந்த அபேட்சகர் பொது வேட்பாளராக இருக்கமாட்டார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அங்கீகாரத்தைப் பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அபேட்சகராக இருப்பார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04