யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட இருவரையும் அடுத்த மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

படுகொலை தொடர்பில் சிறுமியின் உறவினரான 22 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு அடுத்த மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.