(நா.தனுஜா)

 உயர்தர மாணவர்களுக்கு இலவசமாக டெப் கணினி வழங்கும் திட்டத்தினை ஸ்திரமாக நடைமுறைப்படுத்துவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். இதற்கமைவான ஆலோசனைகளை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

டெப் கணினி வழங்கும் ஆலோசனையை முறைப்படுத்தப்பட்ட திட்டமாக நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி அமைச்சில் இடம்பெற்ற கூட்டத்திலும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் தேர்தலின் போது உயர்தர மாணவர்களுக்கு இலவச டெப் கணினி வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படும் என உறுதியளித்திருந்தது. ஆனால் குறித்த திட்டத்தினை முனனெடுப்பதில் தேசிய அரசாங்கத்தின் பங்காளிகளுக்குள் இணக்கப்பாடுகள் ஏற்பட வில்லை. இதன் பின்னர் பிரதமரின் நேரடி தலையீட்டின் கீழ் முறையானதொரு திட்டமாக முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரின் தீர்மானத்தின்படி அடுத்த வருடம் முதல் உயர்தர மாணவர்களுக்கு இலவச டெப் கணினி வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.