சமூக விரோத செயல்களைக் கட்டுப்படுத்த; ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்

Published By: Daya

30 Jun, 2018 | 01:57 PM
image

சமூக விரேத செயல்களைக் கட்டுப்படுத்தும் விதத்தில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும் வடமாகாண ஆளுநர் தலைமையில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய கலந்துரையாடல் எதிர்வரும் 09 ஆம்திகதி திங்கட்கிழமை யாழில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

வடக்கில்தொடர்ச்சியாக பல்வேறுபட்ட சமூக விரோத செயல்கள் இடம்பெற்றவண்ணமுள்ளது. அண்மையில் பாடசாலைமாணவி ஒருவர் கழுத்துநெரித்துக் கொலைசெய்யப்பட் சம்பவம் அனைவரையும் உலுக்கியுள்ளது. இந்தப் பிண்ணனியில் ஈடுபட்டு அனைவரும் கைது செய்யப்பட்டு சட்டதின்முன் நிறுத்தவேண்டும்.

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதற்கும் மக்களுக்க விழிப்பணர்வுகளை ஏற்படுத்தும் நோக்குடன் அரச அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் பொலிஸார் மற்றும் முப்படை உயர் அதிகாரிகளை உள்ளடக்கிய கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 9 ஆம் திகதி திங்கட்கிழமை ஆளுநர் தலைமையில் இடம்பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் பொலிஸார் மற்றும் முப்படை பிரதானிகள் மற்றும் சமூக சேவை திணைக்களங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபைஅமைச்சர்கள் , உறுப்பினர்கள் , பிரதேச சபையின் தவிசாளர் போன்றவர்களை உள்ளடக்கிய சந்திப்பு இடம்பெறுவதற்கு ஏற்பாடாகியுள்ளது.

இதற்கானநடவடிக்கைகளை வடமாகாண ஆளுநர் றொஜினோல்ட்குரேயுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் இதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வார் என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21