வடக்கில் பாலியல் துஸ்பிரயோகித்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிறுமி ரெஜினாவுக்கு நீதி கோரியும், அரசாங்கத்தை கண்டித்தும் இன்று காலை செங்கலடியில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

இவ் ஆர்ப்பாட்டத்தில கலந்து கொண்டவர்கள் “ரெஜினாவின் கொலைக்கு நீதி வேண்டும்” “அரசே குற்றவாளிகளை உடன் தண்டிக்கவும்” “நல்லாட்சி அரசில் சிறுவர் படுகொலைகள்” போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.

சிறுவர்கள் பெரியவர்கள் சமூக நல அமைப்பினர் வியாபாரிகள் என 100க்கும் மேற்பட்டோர் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.