லிபியா அருகே அகதிகள் சென்ற படகு மூழ்கியதில் 100 அகதிகள் வரை உயிரிழந்திருக்கலாம் என அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் பலர் உள்நாட்டு போர் மற்றும் பஞ்சத்தால் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் பெரிய படகு ஒன்றில் ஏராளமான அகதிகள் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது படகின் இயந்திரப்  பகுதி வெடித்துச் சிதறி நீரில் மூழ்கியுள்ளது.

இவ் விபத்தில் உயிரிழந்து சடலமாக மிதந்த 3 குழந்தைகளின் உடல்களை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர்.

விபத்து காரணமாக 100 அகதிகள் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும் நீரில் தத்தளித்த 350க்கும் மேற்பட்டவர்கள் லிபிய கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.