குழந்தைகளுக்கு மூச்சு விடுதலிலோ அல்லது உணவு வகைகளிலோ அல்லது தோலிலோ ஏதேனும் ஒவ்வாமை இருந்தால் அதனை உடனடியாக கண்டறிந்து சிகிச்சை பெற்று கொள்ளவேண்டும். 

இல்லையில் Eosinophilic Esophagitis என்ற பாதிப்பிற்கு ஆளாக நேரிடும். இதன் காரணமாக வாயிற்கும் வயிற்றிற்கும் இடையே உள்ள உணவுக்குழாயில் வீக்கமோ அல்லது கட்டியோ ஏற்படும். 

இதனை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சைப் பெற்றால் குணமடையலாம். ஆனால் முற்றிய நிலையிலிருந்தால் இதனை கட்டுப்படுத்தி நிவாரணம் மட்டுமே பெற இயலும். ஒவ்வாமை இருக்கும் குழந்தைகளுக்கு ஒவ்வாமையின் காரணமாகவே Eosinophilic Esophagitis என்ற பாதிப்பு ஏற்படும்.

Eosinophilic Esophagitis என்ற பாதிப்பிற்கு ஆளாகும் குழந்தைக்கு சிகிச்சையளிக்காமல் இருந்தால், அவர்கள்  உணவு உட்கொள்ளும் போதும், சுவாசிக்கும் போது ஈஸினோஃபில்ஸ் என்ற ஒரு வகையினதான இரத்த வெள்ளை அணுக்கள் உணவுக்குழாயில் சேரத் தொடங்கும்.

 இதனால் அடிவயிற்றில் வலி உண்டாகும். வாந்தி மற்றும் உணவு விழுங்குவதில் சிரமம் ஏற்படும். இதனால் ஓஸ்துமா, கோலியாக் நோய் போன்ற பாதிப்புகளும் ஏற்படும். ஒரு சில குழந்தைகளுக்கு தொண்டை அடைத்துக்கொள்ளும் நிலை கூட உருவாகும்.

இதனை எண்டாஸ்கோப்பி மற்றும் பயாப்சி மூலமாகத்தான் கண்டறிந்து அதன் வீரியத்தை அறிந்து கொள்ள இயலும். அதன் பிறகு மேலும் பாதிப்பு தொடராமல் இருப்பதற்கான சிகிச்சை வழங்கப்படுகிறது. 

அத்துடன் இந்த பாதிப்பு மேலும் பரவாமல் இருப்பதற்கான தடுப்பு சிகிச்சையும் அளித்து இதனை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க இயலும்.