இந்­தி­யா­வுக்கு செஞ்­சோற்றுக் கடன் தீர்க்கும் பணியில் பிர­தமர்

Published By: Robert

25 Feb, 2016 | 10:33 AM
image

பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க இந்­தி­யா­விற்கு தனது செஞ்­சோற்றுக் கடனை தீர்க்­கின்றார். எம்மை துரோ­கிகள் என சாடும் பிர­தமர் இன்று நாட்டின் அனைத்து வளங்­க­ளையும் கூட்டு ஒப்­பந்தம் மூலம் இந்­தி­யா­விற்கு எழுதிக் கொடுக்க முயற்­சிக்­கின்றார் என முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சர் பேரா­சி­ரியர் ஜீ.எல். பீரிஸ் தெரி­வித்தார்.

இலங்­கையின் கடல் வளத்தை இந்­தி­யா­வி­ட­மி­ருந்து பாது­காக்க அர­சாங்கம் இது வரையில் எவ்­வி­த­மான நட­வ­டிக்­கையும் எடுக்கவில்லை. இலங்கை -– இந்­திய கூட்டு ஆணைக்­கு­ழுவில் இதற்­கான சந்­தர்ப்பம் இருந்தும் அர­சாங்கம் பயன்­ப­டுத்திக் கொள்ளவில்லை. மாறாக எமது பொரு­ளா­தார நிலைகள் இந்­தி­யா­விற்கு தாரை­வார்த்து கொடுக்­கப்­ப­டு­கின்­றமை வேத­னை­ய­ளிக்­கின்­றது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

ராஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள என்.எம்.பெரேரா நிலை­யத்தில் நேற்று இடம்­பெற்ற ஊடக சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சர் பேரா­சி­ரியர் ஜீ.எல். பீரிஸ் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

கைச்­சாத்­திட உத்­தே­சிக்­கப்­பட்­டுள்ள இலங்கை–இந்­திய கூட்டு ஒப்­பந்­தத்­திற்கு எதிர்ப்பு தெரி­விப்­ப­வர்கள் தேசத் துரோ­கிகள் என பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார். உண்­மையில் யார் துரோ­கிகள் என்­பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்­திய மீனவ பட­குகள் பல எமது கடற்­ப­ரப்­பிற்குள் வந்து எமது மீன் வளத்தை சூறையாடிச் செல்­கின்­றன. இது வரையில் 90 பட­குகள் மற்றும் 100க்கும் அதி­க­மான இந்­திய மீன­வர்கள் இலங்­கையில் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இவ்­வாறு இந்­தியா எமது வளத்தை கொள்­ளை­ய­டிக்­கின்ற நிலையில் அர­சாங்கம் அதனை தடுக்க எவ்­வி­த­மான நட­வ­டிக்­கை­களும் எடுக்­காது மேலும் ஒப்­பந்­தங்­களை கைச்­சாத்­திட்டு மொத்த வளத்­தையும் இந்­தி­யா­விற்கு தாரை­வார்த்துக் கொடுக்­கின்­றது.

இலங்கை –- இந்­திய கூட்டு ஆணைக்­கு­ழுவின் போது மீனவர் பிரச்­ச­ினைக்கு நிரந்­தர தீர்வு காணப்­படக் கூடிய சந்­தர்ப்பம் காணப்­பட்­டது. அதனை அர­சாங்கம் பயன்­ப­டுத்த வில்லை. இந்­தி­யா­விற்கு எதி­ராக செயற்­பட முடி­யாத வலுவிழந்த நிலையிலேயே அரசாங்கம் காணப்படுகின்றது. கடந்த தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கு உதவி செய்த இந்தியாவிற்கு செஞ்சோற்றுக் கடன் தீர்க்கும் நிலையிலேயே பிரதமர் செயற்படுகின்றார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55