யாழ்ப்பாணம், மல்லாகம் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 12 சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஜூலை மாதம் 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று அவர்களை ஆஜர்படுத்தியபோதே நீதிவான் மேற்கண்ட உததரவை பிறப்பித்தார்.

குறித்த இந்த 12 சந்தேக நபர்களும், மல்லாகம் பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு காரணமாக அமைந்ததாக கூறப்படும் குழப்ப நிலைமை தோற்றுவித்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே  கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.