கிளிநொச்சி அம்பால்குளம் பகுதியில் சிறுத்தையொன்றை துன்புறுத்தி அடித்துக் கொன்றமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 10 பேருக்கும் எதிர்வரும் ஜூலை மாதம் 03 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் குறித்த சந்தேக நபர்களை ஆஜர்படுத்தியபோதே நீதிவான் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தார்.