(எம்.மனோசித்ரா)

குருணாகல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்கடுவாவ பிரதேசத்தில் வலம்புரி சங்குகளுடன் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருணாகல் பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் 38 தொடக்கம் 42 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் இன்று  குருணாகல் பிரதேச நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டுள்ளனர்.

பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.