கோரிக்கைகளை ஏற்காமையினாலேயே பிரபாகரன் ஆயுதம் ஏந்த வேண்டி ஏற்பட்டது

Published By: Robert

25 Feb, 2016 | 10:28 AM
image

தந்தை செல்­வா­வி­னு­டைய கோரிக்­கைகள், ஒப்­பந்­தங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டா­மை­யி­னா­லேயே பிர­பா­கரன் ஆயுதம் ஏந்த வேண்­டிய சூழ்­நிலை ஏற்­பட்­ட­தாக சபையில் சுட்­டிக்­காட்­டிய தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சார்ள்ஸ் சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான தீர்வை உறு­திப்­ப­டுத்த வேண்டும் எனவும் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தை அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக மாற்­றி­ய­மைப்­பது குறித்த பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

தற்­போது பாரா­ளு­மன்­றத்தில் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண்­டு­மென்ற கருத்து முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. நிறை­வேற்று அதி­கா­ரங்­களை கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை மாற்ற வேண்டும். தேர்தல் மறு­சீ­ர­மைப்பு, இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு உள்­ளிட்ட விட­யங்கள் குறித்து கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றான செயற்­பாட்டை நல்­லாட்சி அர­சாங்கம் முன்­னெ­டுத்­தி­ருப்­ப­தா­னது வர­வேற்­கப்­பட வேண்­டி­யது. புதிய அர­சி­ய­ல­மைப்பில் வட­கி­ழக்கு இணைந்த தாய­கத்தில் தமி­ழர்­களின் உரி­மைகள் உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

சர்­வ­தேச நாடு­களில் உரி­மைக்­காக போரா­டிய நாடு­களில் ஒற்­றை­யாட்சி முறைமை வெற்­றி­ய­ளிக்­காத நிலை­மை­களே காணப்­ப­டு­கின்­றன. சமஷ்டி முறை­மை­யி­லான ஆட்சி முறை­களே அவ்­வா­றான நாடு­களில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இதன் மூலம் அவ்­வா­றான நிகழ்வு மீண்டும் நிக­ழாமை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.

கடந்த காலத்தில் செல்வா–  பண்டா, டட்லி –செல்வா ஒப்­பந்­தங்கள் கைச்­சாத்­தி­டப்­பட்­ட­போதும் அவை கிழித்­தெ­றி­யப்­பட்­டன. அர­சி­ய­ல­மைப்பின் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு தொடர்­பான விட­யங்கள் இடம்­பெ­று­வ­தற்­கான நிலை­மைகள் மறுக்­கப்­பட்­டன.

தந்தை செல்­வா­வு­ட­னான ஒப்­பந்­தங்கள், கோரிக்­கைகள் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­ததால் அண்ணன் பிர­பா­கரன் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது. அவ்வாறான நிலைமையில் இலங்கையில் ஒற்றையாட்சி கோட்பாட்டை முன்வைக்காது அனைத்து சமூகங்களை யும் சம அந்தஸ்துடன் வாழ்வதற்கான ஏற்பாடுகள் அரசியல் மறுசீரமைப்பில் உள் வாங்கப்பட வேண்டியது அவசியம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரஜா சக்தி குழு மக்களால் துரத்தப்படும்...

2026-02-18 18:36:42
news-image

வங்குரோத்தடைந்த அரசியல்வாதிகள் நாட்டில் மீண்டும் இனவாதம்,...

2026-02-18 18:20:34
news-image

தமிழ்த் அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரிட்டன்...

2026-02-18 18:14:01
news-image

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்த...

2026-02-18 18:15:46
news-image

அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மின் நுகர்வோருக்காக...

2026-02-18 17:54:08
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு திருகோணமலை...

2026-02-18 17:18:51
news-image

வத்தளையில் 9,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றல்

2026-02-18 17:16:06
news-image

குடும்ப தகராறு ; பிரிந்து வாழும்...

2026-02-18 16:56:26
news-image

மொட்டு கட்சியுடன் "மக்கள் குரல்" சந்திப்பு!

2026-02-18 16:50:14
news-image

மாத்தளையில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்:...

2026-02-18 16:29:50
news-image

அக்குரேகொட இரட்டைக்கொலை: சகோதரர்கள் விளக்கமறியலில்!

2026-02-18 16:08:54
news-image

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பாணை!

2026-02-18 15:28:45