வீட்டில் தனிமையில் வசித்துவந்த வயோதிபப் பெண்ணொருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் குறித்த நபரின் நடமாட்டம் காணப்படாத நிலையில் அயல் வீட்டார் வீட்டினை சென்று பார்த்த போதே கறித்த நபர் இறந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், கொக்குவில் கிழக்கு அச்சகவீதியைச் சேர்ந்த 68 வயதுடைய சண்முகலிங்கம் அன்னலட்சுமி என்ற வயயோதிபப் பெண்ணே இவ்வாறு இறந்தநிலையில் சடலமாக மீட்கப்பட்டவராவார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.