போலிச் சான்றிதழ்களை தாயாரித்து நீர்கொழும்பு பகுதியில் பிரபல வைத்தியராக தன்னை முதன்மைப் படுத்திக் கொண்டு பணக்கார பெண் ஒருவரை ஏமாற்றி திருமணம் செய்த நபர் ஒருவரை நீர்கொழும்பு பொலிஸார் கடந்த 27ஆம் திகதி கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் பணக்கார பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதோடு மட்டுமல்லாது பல காரணங்களை சொல்லி மனைவியை ஏமாற்றி விட்டு அவரிடமிருந்து  பணம் பெற்றுக் கொண்டு கம்பஹா, பமுனுகம மற்றும் நீர்கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் சூதாடி பல பணக்காரார்களை வஞ்சகமாக ஏமாற்றியும் வந்துள்ளார்.

இவ்வாறு சூதாடி ஒரு கோடிக்கும் அதிகமான பணத்தை குறித்த போலி வைத்தியர் தன்னிடம் வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பமுனுகம – வெலிகெடிய பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான ஜோசப் சரன ப்ரதீப் என்பவராவார்.

கைது செய்த குறித்த சந்தேக நபரை பொலிஸார் பொலிஸ் விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேக நபரை நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளனர்.