மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள விவேகானந்தபுரம் பிரதேசத்தில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர். 

வெல்லாவெளி விவேகானந்தபுரத்தைச் சேர்ந்த 17 வயதுடைய அரியநாயகம் நிருலஷனி என்பவரே உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இது குறித்து தெரியவருவதாவது, 

குறித்த சிறிமியின் வீட்டில் நேற்று மாலை 5 மணியளவில் உறவினர்கள் எவருமில்லாத நிலையில் வீட்டின் கூரையில் சேலையினை போட்டு  தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.

 குறித்த சம்பவத்தை கண்ட தாயார் உடனடியாக சேலையை அறுத்து களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற நிலையில் அவரைபரிசோதித்த வைத்தியர்கள் உயிரிழந்த நிலையில் எடுத்து வந்தாக தெரிவித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பவிசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில்  வைக்கப்பட்டுள்ளது.

 குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.