தமிழரே இலங்கையின் மூத்த குடிகள் - சி.வி

Published By: Vishnu

29 Jun, 2018 | 10:17 AM
image

இலங்கையின் மூத்த குடிகள் தமிழரே என்பதற்கு தற்போது போதிய சான்றுகள் கிடைத்துள்ளன. இதுவரை சிங்கள அறிஞர்களால் குறிப்பிட்டு வரப்பட்ட வரலாறு பிழையானது. உண்மையை உள்ளவாறு உரைப்பது தவறாகாது. சினமூட்டுதல் தவறு என்றால் எமது உண்மை வரலாறு என்றும் வெளிவராது போய்விடும். சினமூட்டியேனும் உண்மைகளை வெளிக் கொண்டுவர வேண்டும் என்­பதே எனது விருப்­ப­மாகும் என்று வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

வாாரந்தக் கேள்­விக்கு பதில் அளிக்கும் அவர் இவ்­வாறு சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். இலங்­கையின் மூத்த குடிகள் தமி­ழரே என்று ஒரு குண்­டைத்­தூக்கிப் போட்டு வரு­கின்­றீர்­களே! சிங்­களப் பேரா­சி­ரி­யர்கள் இது­வரை கூறி­வந்­ததை முற்­றாக மாற்றும் வண்ணம் உங்கள் கருத்து அமைந்­துள்­ளது. உங்கள் கூற்று சிங்­கள மக்­களை சீற்­ற­ம­டையச் செய்யும் அல்­லவா? என்று எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு பதில் அளித்­துள்ள அவர் மேலும் கூறி­யுள்­ள­தா­வது,

உண்­மையை  சில தரு­ணங்­களில் கூறாது விடு­வது பொருத்­த­மா­ன­தாகும். சில தரு­ணங்­களில் அதனை இடித்துக் கூற வேண்­டி­யுள்­ளது. ஒருவர் சிலரால் வாள் தடி­க­ளுடன் துரத்­தப்­பட்டு வரு­கின்றார். அவர் உங்கள் வீட்­டினுள் நுழைந்து ஒளிந்து கொள்­கின்றார். வந்­த­வர்கள் அவரின் அடை­யா­ளங்­களைக் கூறி வந்­தாரா? என்று கேட்­கின்­றார்கள். ஆம் என்று அவரைப் பிடித்துக் கொடுத்தால்  ஒழிந்­த­வரின் உயிர் உங்கள் முன்­னி­லை­யி­லேயே பிரிய சந்­தர்ப்பம் உண்டு. நீங்கள் முடி­யு­மெனில் மௌனம் காக்­கலாம் அல்­லது இல்லை என்று கூறலாம். பொய்­மையும் வாய்மை இடத்தே புரை­தீர்ந்­த­ நன்மை பயக்கும் எனின் என்று பொய்­யா­மொ­ழி­யி­ன­ரா­கிய வள்­ளு­வரே கூறி­யி­ருக்­கின்றார். 

அதா­வது பொய்­யான சொற்கள் குற்­ற­மற்ற நன்­மையைப் பிறர்க்கு நல்­கு­மாயின் அச் சொற்கள் வாய்மைச் சொற்கள் போன்ற நிலையை அடை­வன என்றார். அவ்­வா­றான சொற்­க­ளா­னது பிறர்க்கு நன்மை பயக்க வேண்டும். தனக்கு நன்மை தரு­வ­தாக இருந்தால் அது சுய­நலம் ஆகி­விடும். ஆக­வேதான் புரைதீர்ந்த என்றார் வள்­ளுவர். குற்றம் அற்ற என்­பது பொருள். 

ஆனால் உண்­மை­யா­னது சில தரு­ணங்­களில் வெளிக்­கொண்­டு­வ­ரப்­ப­டாது நம்மால் மௌனம் காக்­கப்­பட்டால் பொய்­மைகள் நாடு­பூ­ரா­கவும் உலாவத் தொடங்கி விடு­வன. இன்று அவ்­வா­றான ஒரு நிலையே எழுந்­துள்­ளது. பத்தாம் நூற்­றாண்டில் சோழர் படை­யெ­டுப்பின் போது வந்­த­வர்­களே இலங்கைத் தமி­ழர்கள் என்று கூறி வரு­கின்­றார்கள் பெரும்­பான்­மை­யினர். உண்மை அது­வல்ல. இலங்­கையின் மூத்த குடிகள் நாகர்கள் என்று அழைக்­கப்­பட்ட தமி­ழர்­களே என்­பது இப்போது வர­லாற்று ரீதி­யாக ஏற்றுக் கொள்­ளப்­பட்­டுள்­ளது. என்­றாலும் சுய­நலம் கருதி, சிங்­கள அறி­ஞர்கள் உண்­மையைத் தெரிந்தும் அதைத் திரி­பு­ப­டுத்தி சொல்லி வரு­கின்­றார்கள். அவர்­களின் பொய்­மைகள் வாய்­மைக்குள் அடங்­க­மாட்டா. 

உங்­களைப் போலவே ஒரு சிங்­கள அன்பர் ஆத்­தி­ரத்­துடன் எனக்கு மின்­னஞ்சல் ஒன்றை அனுப்­பினார். உண்­மைக்குப் புறம்­பான தக­வல்­களை நான் பரப்பி வரு­கின்றேன் என்றார். அதற்கு உடனே நான் பதில் இறுத்தேன். எனது வர­லாற்று அறி­வின்­படி தமி­ழரின் வர­லாறு பற்­றிய சில விட­யங்­களைச் சரி­யென்று ஏற்­றுக்­கொண்­டுள்ளேன். அவற்றைப் பிழை­யென்று கூறக்­கூ­டிய மேம்­பட்ட அறிவு உங்­க­ளுக்­கி­ருந்தால் உங்கள் கருத்தைக் கூறுங்கள். நான் நூல்­களை வாசித்­த­றிந்து, எமது வர­லாற்றுப் பேரா­சி­ரி­யர்­க­ளுடன் கலந்து ஆலோ­சித்து எனது தர­வுகள் சரியா நீங்கள் கூறு­பவை சரியா என்ற முடி­வுக்கு வரு­கின்றேன் என்று கூறி பின்­வரும் ஐந்து விட­யங்­களை மின்­னஞ்சல் மூலம் அவர்முன் வைத்தேன். 

இலங்­கையில் திரா­வி­டர்கள் புத்த பெரு­மானின் பிறப்­புக்கு முன்­னரே இருந்து வாழ்ந்து வந்­துள்­ளார்கள். 

ஒரு முழு­மை­யான மொழி என்ற முறையில் சிங்­கள மொழி பரி­ணாமம் பெற்­றது கி.பி. 6 ஆம் அல்­லது 7 ஆம் நூற்­றாண்­டி­லேயே. அதற்கு முன் சிங்­கள மொழி என்று ஒன்று இருக்­க­வில்லை.

நவீன சோத­னைகள் தற்­போ­தைய சிங்­கள மக்கள் பண்­டைய திரா­வி­டரின் வாரி­சு­களே என்­பதை உறு­திப்­ப­டுத்­து­கின்­றன. திரா­விடர் என்ற சொல்லும் தமிழர் என்ற சொல்லும் தமி­ழ­ரையே குறிப்­பி­டு­கின்­றன. சமஸ்­கி­ருதம் பேசிய மக்­க­ளுக்கு தமிழர் என்று உச்­ச­ரிக்க முடி­யா­ததால் அவர்­களே தமி­ழர்­களைத் திரா­விடர் என்று அழைத்­தார்கள். 

சிங்­கள மொழி­யா­னது தமிழ், பாளி மற்றும் அக் காலத்­தைய பேச்சு மொழி­களில் இருந்தே உருப்­பெற்­றது. 

சிங்­க­ளவர் என்ற முறையில் வட மாகாணம் பூரா­கவும் எந்தக் கால­கட்­ட­த்திலும் சிங்­கள மக்கள் இங்கு வாழ­வில்லை. தமிழ் மக்கள் வாழ்ந்த பண்­டைய இலங்­கையில் பின்னர் ஒரு கட்­டத்­தி­லேயே சிங்­கள மக்கள் உரு­வெ­டுத்­தார்கள். அவர்கள் தற்­போ­தைய வட மாகா­ணத்தின் தெற்குப் பக்­க­மாக வாழ்ந்து வந்­தார்கள். 

அவர் எனது கூற்றை மறுத்து தனது தர­வு­களை சமர்ப்­பிப்­ப­தாகக் கூறி­யுள்ளார். எனது கூற்­றுக்­களே அவர்­களைக் கோப­ம­டையச் செய்து சிந்­திக்­கவும் வைத்­துள்­ளது. உண்மை நிலையை உணர்த்­தினால் சிங்­கள மக்கள் சீற்­ற­ம­டை­வார்கள் என்­பது எனக்குத் தெரியும். நான் சிங்­கள மக்­க­ளுக்கு எதி­ரா­னவன் அல்ல. ஆனால் சிங்­கள மக்கள் இது­வ­ரையில் நிர்­மா­ணித்­துள்ள பொய்­மை­யான வர­லாற்றை எதிர்ப்­பவன். உண்மை வெளிவர வேண்டும் என்ற விருப்பம் உடை­யவன். 

ஒரு திரு­மணம் நடக்­க­வி­ருந்­தது. ஒரு வீட்­டுக்குக் குடி­யி­ருக்க வந்த ஒரு குடும்­பத்­தவர் தாங்கள் அந்த வீட்டுச் சொந்­தக்­கா­ரரின் உற­வினர் என்று கூறி தமது வாரி­சுக்கு திரு­ம­ணமும் நிச்­ச­யித்து விட்­டார்கள். ஆனால் இரு குடும்­பங்­க­ளுக்­கு­மி­டையில் எவ்­வித சொந்­த­மு­மில்லை. குலம் கோத்­திரம் பின்­னணி எல்லாம் வெவ்­வேறு. வீட்டுச் சொந்­தக்­கா­ர­ருக்கு இது தெரிய வந்­தது. ஆயிரம் பொய் சொல்லி என்­றாலும் பெண்­ பிள்ளை ஒரு­வளைக் கரை சேர்க்க வேண்டும் என்று எம் மக்கள் பேசி வந்­துள்­ளதை அவரும் அறிந்­தி­ருந்தார். அவர் மௌனம் காத்­தி­ருக்­கலாம். ஆனால் பொய் சொல்லிக் கல்­யாணம் நடக்­கின்­றதே. அது எதிர்­கா­லத்தில் எத்­த­கைய பாதிப்பை ஏற்­ப­டுத்தும் என்று அவர் யோசித்துப் பார்த்தார். தனது கடமை உண்­மையை உள்­ள­வாறு கூறி­வைப்­பதே என்­பதை உணர்ந்தார். மாப்­பிள்ளை வீட்­டார்கள் சொந்தம் பற்றி வேறு நபர்கள் மூலம் வினா­விய போது உண்­மையைக் கூறினார். எந்­த­வித சொந்­த­மு­மில்லை. அவர் கள் குடி­யி­ருக்க வந்­த­வர்கள் என்­பதைத் தெளிவு­ப­டுத்­தினார். இதனால் நிச்­ச­யார்த்­தத்­துடன் திரு­மணம் தடைப்­பட்­டது. இந்த நிலையை ஏற்­ப­டுத்­தி­யமை பிழை­யென்று கூறு­வோரும் உண்டு. சரி­யென்று அடித்துக் கூறு­வோரும் உண்டு. 

எது எவ்­வா­றி­ருப்­பினும் உண்­மைக்குப் புறம்­பான தக­வல்­களை ஊரில் உலா­வ­விட்­டது குடி­யி­ருப்­பா­ளரின் தவறு! தான் தவறைச் செய்து விட்டு, பொய்யைப் புனைந்­து­ரைத்து விட்டு, உண்­மையை வெளிக்­கொண்டு வந்­த­வரின் மீது சீற்­ற­ம­டை­வது குடி­யி­ருப்­பா­ளரின் பிழை. அதை உண­ராமல் பேசு­வது பொய்­மையை உண்­மை­யாக்­கு­வது போலாகும். திரு­ம­ண­மா­னபின் உண்மை வெளிவந்தால் தம்­ப­தி­யி­ன­ரி­டை­யேயும் குடும்­பத்­தி­ன­ரி­டை­யேயும் ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்­புக்­களை நாங்கள் எண்­ணிப்­பார்க்க வேண்டும். பொய்­மையை உண்மை என்று சித்­த­ரித்து ஒரு சாரார் நன்­மை­களைப் பெற்று வரப் பார்ப்­பதும் கருத்­துக்­கெ­டுக்­கப்­பட வேண்டும். இவ்­வா­றான நிலை­யில்தான் பொய்­மை­களை விமர்­சித்து வரு­கின்றேன். 

பொய்­மை­களின் வழி­நின்று சீற்­ற­ம­டை­ப­வர்­க­ளுக்கு உண்­மையை எடுத்துக் கூறு­வது பிழை­யன்று. அவ்­வாறு செய்­யா­விட்டால் பொய்­மையை எப்ப வேண்­டு­மா­னாலும் பலாத்­கா­ர­மாக நிலை­நி­றுத்­தலாம் என்­றா­கி­விடும். உண்­மைக்கு ஒரு பலம் உண்டு. அது­பற்றி ஆதி­சங்­க­ரரின் குருவின் குரு­வான கௌட­பாதர் என்­பவர் கூறி­யுள்ளார். உண்­மை­யா­னது ஆயிரம் பொய்­மை­க­ளுக்கு மத்­தி­யிலும் சுடர் விட்டுப் பிர­கா­சிக்கக் கூடி­யது என்றார். அதன் சக்தி அது. எனவே உண்­மையைக் கூறினால் மற்­ற­வர்கள் ஆத்­தி­ரப்­ப­டு­வார்கள் என்று எக்­கா­லத்­திலும் மௌனம் சாதிக்க வேண்டும் என்று எண்­ணு­வது மடமை.  பேரா­சி­ரியர் பத்­ம­நாதன் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்த தமது அண்­மைய நூலான இலங்கைத் தமி­ழர்­வ­ர­லாறு - கிழக்­கி­லங்­கையில் நாகரும் தமிழும் - கி.மு. 250  கி.பி. 300 என்ற நூலின் தமது பதிப்­பு­ரையில் பின்­வ­ரு­மாறு கூறு­கிறார். - 

இலங்­கையின் மூன்­றி­லொரு பாகத்­திலே தமிழர் சமு­தாயம் கி.மு. முத­லிரு நூற்­றாண்­டு­க­ளிலும் உரு­வா­கி­விட்­டது என்­ப­தையும் தொடர்ச்­சி­யான ஒரு நிலப்­ப­கு­தி­யிலே தமிழ் மொழி பேசுவோர் வேளிர் ஆட்­சியின் கீழ­மைந்த சிற்­ற­ர­சுகள் பல­வற்றை உரு­வாக்­கி­விட்­டனர் என்றும் சொல்லக் கூடிய காலம் வந்­துள்­ளது. 

நாகர் தமிழ் மொழி பேசி­ய­வர்கள் என்­ப­தாலும், ஆதி இரும்புக் காலப் பண்­பாட்டைப் பிர­தா­ன­மாக அவர்­களே இலங்­கையிற் பரப்­பி­னார்கள் என்­ப­தாலும் கி.மு. ஏழாம் நூற்­றாண்டு முத­லாகத் தமிழ் ஒரு பேச்சு வழக்கு மொழி­யாக நிலை­பெற்­றுள்­ளமை உய்த்­து­ண­ரப்­ப­டு­கின்­றது. தமிழ் மொழியின் தொன்மை பற்றி தமிழ்­நாட்டுத் தொல்­பொருள் சின்­னங்­களை ஆதா­ர­மாகக் கொண்டு நிர்­ண­யிக்க முடி­யா­த­வற்றை இலங்­கையிற் கிடைக்­கின்ற தமிழ்ப் பிராமிக் கல்­வெட்­டுக்­களின் அடிப்­ப­டை­யி­லேயே சொல்ல முடி­கின்­றமை ஒரு குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாகும். ஆகவே இலங்­கையின் மூத்த குடிகள் தமி­ழரே என்று சொல்­வதில் தவறு ஏதும் இருப்­ப­தாகக் கூற­மு­டி­யாது. ஸ்ரீலங்கா கார்­டியன் என்ற பத்­தி­ரி­கையின் 25.01.2013 ஆம் திக­தியப் பிர­தியில் பின்­வ­ரு­மாறு கூறப்­பட்­டுள்­ளது 

சிகல என்ற சொல் (பாளி மொழியில் சிங்கம்) முதன் முதலில் தென்­ப­டு­வது தீப­வன்ச என்ற நூலில் (கி.பி. 4-5 ஆம் நூற்­றாண்­டு­களில்). இந்த நூலில் சிகல என்ற சொல்­லா­னது ஒரு முறையே தென்­ப­டு­கி­றது. சிங்கம் என்ற சொல்லின் கார­ண­மா­கவே இந்தத் தீவு சிகல என்று அழைக்­கப்­பட்­டது. 5, 6 ஆம் நூற்­றாண்டு காலத்­தைய நூலா­கிய மகா­வம்­சத்தில் சிகல என்ற சொல் இரு­மு­றையே குறிப்­பி­டப்­ப­டு­கி­றது. ஆனால் கிறிஸ்­து­வுக்கு முன்­னைய இரா­மா­ய­ணத்தில் இத்­தீவு இலங்கை (லங்கா) என்றே அழைக்கப்பட்டுள்ளது. தீபவன்ச இவ்வாறான சொற்களைப் பாவிப்பதற்கு முன்னர் இலங்கையில் சிங்கள இனம் என்று ஒன்று இருக்கவில்லை. கி.பி. 4, 5 ஆம் நூற்றாண்டுகளில் கூட பின்னர் சிங்கள மொழி என்று அழைக்கப்பட்ட மொழி வழக்கிற்கு வரவில்லை. தீபவன்ச, மகாவன்ச என்ற நூல்களை அம்மொழியில் எழுதும் அளவுக்கு அம்மொழி வெளிவந்தி ருக்கவில்லை. 

ஆகவே அந்தக் காலத்தில் சிங்களம் பேசாதவர்களை சிங்களவர் என்று அடை யாளப்படுத்துவது தவறானது. எனவே இலங்கையின் மூத்த குடிகள் தமிழரே என்பதற்கு தற்போது போதிய சான்றுகள் கிடைத்துள்ளன. இதுவரை சிங்கள அறி ஞர்களால் குறிப்பிட்டு வரப்பட்ட வரலாறு பிழையானது. உண்மையை உள்ளவாறு உரைப்பது தவறாகாது. சினமூட்டுதல் தவறு என்றால் எமது உண்மை வரலாறு எஞ்ஞான்றும் வெளிவராது போய்விடும். சினமூட்டியேனும் உண்மைகளை வெளிக் கொண்டுவர வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48