திரையில் இணைந்த சூர்யா - கார்த்தி

By Daya

29 Jun, 2018 | 09:49 AM
image

சூர்யா தயாரிப்பில், கார்த்தி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் அண்ணன், தம்பிகளான நடிகர்கள் சூர்யாவும், கார்த்தியும் திரையில் ஒன்றாக இணைந்து நடிக்க விருப்பப்படும் நிலையில், கார்த்தி படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம்` கடைக்குட்டி சிங்கம்'.

பாண்டிராஜ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கார்த்தி விவசாயியாக நடித்துள்ளார். கார்த்தி ஜோடியாக சாயிஷா நடித்திருக்கிறார். பிரியா பவானிசங்கர், அர்த்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ், 5 அக்காக்களாக மெளனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, ஸ்ரீமன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் இடம்பெறும் மாட்டுவண்டி பந்தையத்தில் வெற்றி பெறும் கார்த்திக்கு, அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் சூர்யா பரிசு அளிக்கும்படியாக ஒரு காட்சி இடம்பெறுகிறதாம். கார்த்திக்கு, சூர்யா வெற்றிக் கோப்பை அளிக்கும்படியான ஒரு புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முழுக்க முழுக்க கிராமத்திலேயே படமாக்கப்பட்டுள்ள இந்த படம் விவசாயம் மற்றும் சொந்த பந்தங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் படமாக உருவாகி இருக்கிறது. 

டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சென்சாரில் யு சான்றிதழை பெற்றுள்ள இந்த படம் வருகிற ஜூலை 13-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்