பண்டாரகம, ரம்புக்கண பிரதேசத்தில் பொல்கொட வாவியில் உயிரிழந்த நிலையில் மிதந்த  ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பன்னிப்பிட்டிய, வீரமாவத்தையைச் சேர்ந்த 52 வயதான ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் கடந்த 23 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்ததாக மஹரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதியப்பட்டுள்ளது.