பங்­க­ளா­தேஷில் நடை­பெற்­று­வரும் ஆசி­யக்­கிண்ண இரு­ப­துக்கு 20 தொடரில் இளம் வீரர்­களைக் கொண்ட இலங்கை அணி தனது முதல் போட்­டியில் ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸை இன்று எதிர்த்­தா­டு­கி­றது. டாக்­காவில் இன்று இரவு 7 மணிக்கு ஆரம்­ப­மாகும் இந்தப் போட்­டியில் மலிங்க தலை­மை­யி­லான இலங்கை அணி கள­மி­றங்­கு­கி­றது.

இந்தப் போட்டி குறித்து கருத்து வெளியிட்­டுள்ள இலங்கை அணித் தலைவர் மலிங்க, கண்­டிப்­பாக இந்த தொடர் தனிப்­பட்ட நப­ருக்­கா­னது அல்ல. போட்­டி­களின் போது எப்­படி அனை­வரும் செயற்­ப­டு­கிறோம் என்­பதை பொறுத்தே வெற்றி வாய்ப்பு அமையும்.

இந்­திய தொடரில் இலங்கை அணியின் துடுப்­பாட்ட வரிசை சற்று தடு­மாற்­றத்­து­டனேயே காணப்­பட்­டது. ஆனால் தற்­போது புதி­தாக ஒரு கிரிக்கெட் தொடரில் விளை­யா­ட­வி­ருக்­கிறோம்.

இலங்கை அணியில் பல இளம் வீரர்கள் இருப்­பது பார்க்­கவே சிறப்­பாக உள்­ளது. அது அணிக்கு புத்­து­ணர்வை ஏற்­ப­டுத்­து­கி­றது. அவர்­களின் அனு­ப­வமும் அணிக்கு உத­வி­யாக இருக்கும்.

அதேபோல் அணியில் உள்ள மூத்த வீரர்கள் அணிக்கு நல்ல நிலைமையை ஏற்படுத்தி தருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்“ என்று கூறியுள்ளார்.