(இரோஷா வேலு) 

பொலனறுவை, பகுமூன பகுதியில் மின்சார சபை கிளைக் காரியாலயமொன்றில் பணிபுரியும் மின்சார சபை ஊழியர் வீடொன்றுக்கு சட்டவிரோதமாக பெறப்பட்ட மின் இணைப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருக்க இலஞ்சம் பெறப்பட்ட வேளை கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 

பொலன்னறுவை பகமூன பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் வீட்டுக்கு மின்னினைப்பை பெற்றுக்கொண்ட நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமலிருக்க இவ்வாறு குறித்த அதிகாரி இலஞ்சம் பெற முனைவதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் இவரை கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரை ஹிங்குரங்கொட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.