இராஜதுரை ஹஷான்)
சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்டு வரும் சந்தேக நபரான ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவை தன்னால் நாட்டுக்கு அழைத்து வர முடியும் என மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளமையானது அவர் மீது பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசநாயக்க இவரது கருத்துக்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி விசாரனைகளை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்
சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அட்டை விடுத்து தேடப்படும் உதயங்க வீரதுங்க தான் கூறினால் வருவார் என்றும் அவரது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஒரு வழிமுறைகளை ஏற்படுத்தி விட்டு ஒரு மாத காலத்திற்குள் இலங்கைக்கு வருவார் என மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளமையின் ஊடாக பாரிய உண்மை வெளிப்பட்டுள்ளது.
சர்வதேச நாடுகளில் தேடப்படும் குற்றவாளிகளுக்கும் தனக்கும் நெருங்கிய தொடர்பு பேணப்பட்டு வருகின்றது என்று அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.

உதயங்க வீரதுங்களை நாட்டுக்கு மீள் கொண்டு வர அரசாங்கம் சட்டத்தின் பிரகாரம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மறுபுறம் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனையும் நாட்டுக்கு கொண்டு வரும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இருவரும் சட்டத்தின் பார்வையில் விசாரனைகளுக்கு உட்படுத்தப்படவேண்டிய சந்தேக நபர்களாகவே காணப்படுகின்றனர்.
மிக் விமான கொள்வனவு மோசடியில் முக்கிய நபராக கருதப்படும் உதயங்க வீரதுங்க அந்த மோசடியுடன் தொடர்புப்பட்டவர்களுடன் இன்றும் தொடர்புப்பட்டவர்களாகவே காணப்படுகின்றனர் என்ற விடயம் தற்போது அம்பலமாகியுள்ளது.
உதயங்க வீரதுங்க தொடர்பில் இதுவரை காலமும் மௌனம் காத்த மஹிந்த ராஜபக்சகுற்றவாளிக்கும் தனக்கும் இதுவரை காலமும் யாரும் அறியாத தொடர்பு காணப்படுகின்றது என்ற விடயத்தினை குறிப்பிட்டுள்ளமை வரவேற்கதக்கது . இனியாவது நாட்டு மக்கள் உண்மை நிலையினை அறிந்துக் கொள்ள வேண்டும்.
குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அதனுடன் தொடர்புடைய குற்றவாளிகளே அவர்களுக்கு ஆதரவாள குரல் கொடுத்து வருகின்றனர். ஆகவே மஹிந்தவின் கருத்து தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM