கென்யா தலைநகரில் காய்கறி சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் பரிதாபமாக  உயிரிழந்துள்ளதோடு  70 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்

கென்யா தலைநகர் நைரோபியில் அமைந்துள்ள காய்கறி சந்தையில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சந்தையில் பற்றி எரிந்த தீ, படிப்படியாக தீவிரமடைந்து அருகில்  இருந்த கட்டிடங்களுக்கும் பரவியது. இதில், 15 பேர்  உயிரிழந்துள்ளதோடு 70-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

தீ விபத்தினால் கட்டிடங்கள் சிதைந்து பலவீனமாக காணப்படுவதால் உயிரிழந்தவர்களில் சிலரது உடல்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தீயனைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.