இரு­ப­துக்கு 20 ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி பங்­க­ளா­தேஷில் நேற்று தொடங்­கி­யது. இது­வ­ரையில் ஒருநாள் போட்­டி­யாக விளை­யா­டப்­பட்டு வந்த ஆசியக் கிண்ணம் இந்தத் தட­வைதான் இரு­ப­துக்கு 20 போட்டி முறைமை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. இந்த அறி­முக தொடரில் தொடரை நடத்தும் பங்­க­ளா­தேஷை 45 ஓட்­டங்­களால் வீழ்த்­திய இந்­தியா வர­லாற்று வெற்­றியை பதி­வு­செய்­தது.

2016ஆம் ஆண்­டுக்­கான ஆசியக் கிண்ணத் தொடரின் முதல் போட்­டியில் இந்­தியா மற்றும் பங்­க­ளாதேஷ் அணிகள் மோதிக்­கொண்­டன.

நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்ற பங்­க­ளாதேஷ், இந்­தி­யாவை முதலில் துடுப்­பெ­டுத்­தா­டும்­படி அழைத்­தது. அதன்­படி கள­மி­றங்­கிய இந்­திய அணி ஆரம்­பத்தில் தட்­டுத்­த­டு­மாறி ஆடி­னாலும் இறுதி 5 ஓவர்­களில் ரோஹித் ஷர்மா மற்றும் பாண்­டியா அதி­ர­டி­காட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்­கெட்­டுக்­களை இழந்து 166 ஓட்­டங்­களைப் பெற்­றது.

பங்­க­ளா­தேஷின் வேகப்­பந்து வீச்­சா­ளர்கள் இந்­திய தொடக்க ஆட்­டக்­கா­ரர்கள் ரோஹித் மற்றும் தவானை ஓட்டம் எடுக்க விடாமல் தடு­மாற வைத்­தார்கள். இரு­வரும் ஆரம்ப கட்ட ஓவர்­களில் வேக­மாக ஓட்­டங்­களை குவிக்க முடி­யாமல் திண­றி­னார்கள். தவான் 2 ஓட்­டங்­க­ளுடன் வெ ளியேற அடுத்து வந்த கோஹ்­லியும் 8 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார்.

இதில் ரோஹித் ஷர்மா 83 ஓட்­டங்­களை விளாசி இந்­தி­யாவின் வெற்­றிக்கு கைகொ­டுத்தார். மறுமு­னையில் பாண்­டியா 31 ஓட்­டங்­களை விளா­சினார். ஏனைய வீரர்கள் அனை­வரும் சொற்ப ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்­தனர்.

167 என்ற வெற்றி இலக்­குடன் கள­மி­றங்­கிய பங்­க­ளாதேஷ் 20 ஓவர்­களில் 7 விக்­கெட்­டுக்­களை இழந்து 121 ஓட்­டங்­களைப் பெற்று 45 ஓட்­டங்­களால் தோல்­வி­ய­டைந்­தது. பங்களாதேஷின் ஷபீர் அதிகூடிய ஓட்டங்களாக 44 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் இந்தியாவின் நெஹ்ரா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.