இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் தலைவர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த  சுஷாந்த் சிங் ராஜ்புத், நிலவின் பின்புறத்தில் மாரே மஸ்கோவியென்ஸ் என அழைக்கப்படும் பகுதியில் நிலப்பகுதியொன்றை வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஹிந்தி நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத், கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்துள்ளவர் தற்போது, வின்வெளி சம்பந்தப்பட்ட கதையில் தான் நடித்து வரும் அவர் தனது கனவை நிறைவேற்றுவதற்காக அவர் நிலவில்  இடம் வாங்கியுள்ளார்.

பூமியில் இருந்து கண்ணுக்கு தெரியாத நிலவின் பின்பகுதி மாரே மஸ்கோவியென்ஸ் (Mare Muscoviense) என்று அழைக்கப்படும். இந்த பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தை தான் வாங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, மேடே 14 என்ற நவீன தொலைநோக்கியை அவர் சொந்தமாக வைத்துள்ளார்.

‘பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கின்ற வெவ்வேறு வழிகளே கேள்விகளுக்கான பதில்கள் என்று நம்ப விரும்புகிறேன். எனவே நாம் விளக்கங்களை வரிசைப்படுத்துகின்ற விதத்தில் உள்ள மாறுபாடுகள், நுணுக்கம் ஆகியவை எதிர்காலத்தில் வேறுபட்ட பதிப்புகளை உருவாக்கும். நான் இப்போது ஒரு நுணுக்கத்தை நிறுத்துகிறேன் மற்றும் ஏற்கனவே, நான் நிலவையும் தாண்டிவிட்டேன்’ என அவர் இது தொடர்பாக தெரிவித்துள்ளார்.

சர்வதேச லூனார் நில பதிவகம் என்ற அமைப்பிடம் இருந்து அவர் நிலத்தை பதிவு செய்துள்ள முதல் ஹிந்தி நடிகர் என்ற பெயரை பெற்றுள்ளார். எனினும், அவர் சட்டரீதியாக அந்த நிலத்தை சொந்தம் கொண்டாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.